மாநில செய்திகள்

சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்க சென்னை ஐகோர்ட் மறுப்பு + "||" + Chennai high court denied bail to siva shankar baba

சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்க சென்னை ஐகோர்ட் மறுப்பு

சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்க சென்னை ஐகோர்ட்  மறுப்பு
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமின் வழங்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துளது.
சென்னை,

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளி முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரில் கேளம்பாக்கம் போலீசார் சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்தநிலையில் தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபாவை தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் டெல்லியில் கைது செய்தனர். பின்னர் அவர் தமிழகம் அழைத்து வரப்பட்டார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல கட்டங்களாக விசாரணை நடத்தினர். அவரது பள்ளியில் உள்ள அவரது அறையிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் சில ரகசிய தகவல்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்களும் வெளியானது. பள்ளி ஆசிரியர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

அண்மையில்,  இந்த வழக்கில்  300 பக்கங்கள் கொண்ட  குற்றப்பத்திரிகையை செங்கல்பட்டு கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்தனர்.இதில் 40 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் இதுவரை சிவசங்கர் பாபா, ஆசிரியைகள் பாரதி, சுஷ்மிதா, தீபா ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபா தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பளித்த சென்னை ஐகோர்ட், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 


தொடர்புடைய செய்திகள்

1. சென்னை ஐகோர்ட்டில் 9 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் ஒப்புதல்
சென்னை ஐகோர்ட்டில் 9 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.
2. போக்சோ வழக்குகளில் சிவசங்கர் பாபாவுக்கு மீண்டும் சிறை
சிவசங்கர் பாபாவை வரும் 27 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3. சென்னை ஐகோர்ட்டிற்கு இரு நீதிபதிகள் நியமனம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு
சென்னை ஐகோர்ட்டில் உள்ள நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.
4. வேதா நிலைய வழக்கில் மேல்முறையீடு செய்யாதது ஏன்? தமிழ்நாடு அரசு விளக்கம்
தனி நீதிபதி சேஷசாயி பிறப்பித்த உத்தரவை ஏற்று வேதா நிலைய சாவிகள் தீபா, தீபக்கிடம் ஒப்படைக்கப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசுடமையாக்கிய சட்டம் ரத்து- சென்னை ஐகோர்ட்டு
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையத்தை அரசுடமையாக்கிய சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.