புளியந்தோப்பு குடியிருப்பு விவகாரம்: சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம்


புளியந்தோப்பு குடியிருப்பு விவகாரம்: சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம்
x
தினத்தந்தி 19 Aug 2021 5:28 AM GMT (Updated: 19 Aug 2021 5:28 AM GMT)

புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு சிதிலமடைந்தது தொடர்பாக சட்டசபையில் திமுக உறுப்பினர் பரந்தாமன் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

சென்னை,

புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு சிதிலமடைந்தது தொடர்பாக இன்று சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இது குறித்து எழும்பூர் திமுக சட்டப் பேரவை உறுப்பினர் பரந்தாமன் தனது உரையில்,

"புளியந்தோப்பு குடிசைமாற்று வாரியம் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள் என்பது ஊடகங்களில் செய்தியாக வெளியாகி இருக்கிறது. எனவே,இதனை கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

இந்த கட்டடம் 2018ல் தொடங்கப்பட்டு 2019ல் முடிக்கப்பட்டது.தொட்டால் விழும் கட்டடத்தை அதிமுக அரசு கட்டியுள்ளது. இந்த கட்டடம் முறைகேடாக கட்டப்பட்டுள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் உள்ளது தெளிவாக தெரிகிறது என்று கூறி கவன ஈர்ப்பு தீர்மானத்தை முன்மொழிந்தார்.

கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சி கட்டிமுடித்த அனைத்து கட்டடங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இந்த கட்டடம் கட்டி முடித்த பிறகு இதற்கு சான்றிதழ் அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் கட்டடம் தொடர்பான அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Next Story