மாநில செய்திகள்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு + "||" + Atmospheric overcast: Chance of heavy rain in 5 districts including Chennai today

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

தமிழ்நாடு கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.


ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு (இன்றும், நாளையும்) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் அளவிலும், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் அளவிலும் இருக்கும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடைஇடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தலா 7 செ.மீ. மழையும், திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் 6 செ.மீ. மழையும், வேலூர் மாவட்டம் காட்பாடியில் 5 செ.மீ. மழையும் பதிவாகி இருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் குமரி, நெல்லை உள்பட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
3. நீலகிரி, சேலம் உள்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, சேலம் உள்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
4. காஷ்மீர் படுகொலை: அமித்ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்த வாய்ப்பு
காஷ்மீரில் பொதுமக்களை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தப்படும் நிலையில் மத்திய அரசு ஆலோசனை கூட்டம் நடத்த இருக்கிறது.
5. தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்வதற்கு வாய்ப்பு
தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.