சென்னை: பராமரிப்பு பணிகளை முன்னிட்டு மின்சார ரெயில் சேவையில் மாற்றம்


சென்னை:  பராமரிப்பு பணிகளை முன்னிட்டு மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
x
தினத்தந்தி 28 Aug 2021 8:03 AM GMT (Updated: 28 Aug 2021 8:03 AM GMT)

சென்னையில் ரெயில் தண்டவாள பராமரிப்பு பணிகளை முன்னிட்டு மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.


சென்னை,

நாட்டில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு கடந்த ஆண்டு மார்ச்சில் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.  இருப்பினும், சரக்கு ரெயில் சேவை இயக்கப்படுகிறது.  கொரோனா 2வது அலை பாதிப்புகள் குறைந்து காணப்படும் சூழலில் குறிப்பிட்ட அளவிலான ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தெற்கு ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே நாளை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை ரெயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், மின்சார ரெயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை கடற்கரை-தாம்பரம் காலை 11, 11.45, தாம்பரம்-சென்னை கடற்கரை காலை 10.50 மணி ரெயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு காலை 11.15, மதியம் 12, 1, 1.20, 2 மணி, தாம்பரம் 11.30, 12.20, 12.40, 1.40, 2.20 மணி ரெயில்களின் சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு, சென்னை எழும்பூரில் இருந்து அவை இயக்கப்படும்.

இதுதவிர, தாம்பரம்-சென்னை கடற்கரை காலை 10.20, 11.30, மதியம் 12.10, 12,30, 1.50 காஞ்சிபுரம்-சென்னை கடற்கரை காலை 8.45, செங்கல்பட்டு-சென்னை கடற்கரை காலை 10.15, 11, மதியம் 12.25 ஆகிய மின்சார ரெயில்களின் சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு சென்னை எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story