செங்கல்பட்டிலுள்ள அரசு மாவட்ட மருத்துவமனையில் காய சிகிச்சை பிரிவு தொடங்கப்படும்


செங்கல்பட்டிலுள்ள அரசு மாவட்ட மருத்துவமனையில் காய சிகிச்சை பிரிவு தொடங்கப்படும்
x
தினத்தந்தி 1 Sep 2021 6:25 PM GMT (Updated: 1 Sep 2021 6:25 PM GMT)

செங்கல்பட்டிலுள்ள அரசு மாவட்ட மருத்துவமனையில் காய சிகிச்சை பிரிவு தொடங்கப்படும் மா.சுப்பிரமணியன் தகவல்.

சென்னை,

சட்டசபையில் உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் (மேட்டுப்பாளையம்) பேசும்போது, மேட்டுப்பாளையம் ஆஸ்பத்திரியில் சி.டி.ஸ்கேன் வசதி செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவமனைகளில் மொத்தம் 113 சி.டி. ஸ்கேனர்ஸ் 87 மையங்களில் பயன்பாட்டில் உள்ளன. ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புதிய சி.டி. ஸ்கேனர் ஒன்று வாங்கி, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு ஒப்பளிக்கப்படும். செங்கல்பட்டிலுள்ள அரசு மாவட்ட மருத்துவமனைக்கு காய பிரிவிற்கான அமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. விரைவில் அது தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story