சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு


சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 8 Sep 2021 5:50 AM GMT (Updated: 8 Sep 2021 6:52 AM GMT)

சட்டசபையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

சென்னை

தமிழக சட்டசபை  பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு துறைககளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று காலை சட்டசபை  கூடிய நிலையில், பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதாகக் கூறி அ.தி.மு.க. எம்.எல் ஏகள் அவையில்  வெளிநடப்பு செய்தனர்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் எல்லாம் முடக்கப்பட்டிருப்பதாக அ.தி.மு.க புகார் கூறியதுடன், அதுகுறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி சட்டசபையில்  இருந்து அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அவை தொடங்கிய சிறிது நேரத்திலேயே வெளிநடப்பு செய்தனர்.

சட்டபசபையில் சில கருத்துகளை எடுத்துரைக்க வாய்ப்பு அளிக்கவில்லை  என எதிர்க்கட்சி  தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Next Story