விநாயகர் சதுர்த்தி: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜை


விநாயகர் சதுர்த்தி: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 10 Sep 2021 2:46 AM GMT (Updated: 2021-09-10T08:16:28+05:30)

விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோயில்களில் இன்று காலை முதலே சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.

சென்னை,

இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோயில்களில் இன்று காலை முதலே சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்று வருகிறது. பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் தங்கள் வீடுகளிலேயே வழிபாடு செய்து வருகின்றனர்.

மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் கட்டாயம் கடைபிடித்து பாதுகாப்பாக விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும் என தமிழக அரசு அறிவுறித்தி உள்ளது.

Next Story