தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு


தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு
x
தினத்தந்தி 10 Sep 2021 7:30 AM GMT (Updated: 10 Sep 2021 7:30 AM GMT)

தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்துள்ளது.

சென்னை,

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது.

இந்நிலையில், இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.18 அதிகரித்து கிராமுக்கு ரூ.4,451க்கு விற்பனையாகிறது. அதன் படி சவரனுக்கு ரூ.144 அதிகரித்து ரூ.35,608 க்கு விற்பனையாகிறது. 

மேலும் வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.68.50க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.68,500க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கடந்த 3 நாட்களாக இதே விலையில் நீட்டிக்கிறது.

Next Story