விநாயகர் சதுர்த்தி: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து


விநாயகர் சதுர்த்தி: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
x
தினத்தந்தி 10 Sep 2021 8:23 AM GMT (Updated: 2021-09-10T13:53:05+05:30)

விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டரில் வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளார். அதில் ” வினை தீர்க்கும் விநாயகப் பெருமான், ஞான முதல்வன் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி திருநாளில் அனைத்து மக்களும் வளமும், நலமும் பெற்று நினைத்த காரியங்களில் வெற்றிப் பெற்று  அன்பும், அமைதியும் பெருகிட என் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Next Story