தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3-வது நாளாக அதிகரிப்பு


தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3-வது நாளாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 10 Sep 2021 2:01 PM GMT (Updated: 2021-09-10T19:31:21+05:30)

தமிழகத்தில் நேற்று 1,596- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று உயர்ந்து வந்தது. இந்த நிலையில், இன்றும் பாதிப்பு எண்ணிக்கை நேற்றை விட உயர்ந்துள்ளது. 

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;  தமிழகத்தில் இன்று 1631-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக இன்று 25 பேர் உயிரிழந்துள்ளனர்.  கொரோனா தொற்றில் இருந்து இன்று குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1,523- ஆக உள்ளது. 

தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 30 ஆயிரத்து 592 ஆக  உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 1 லட்சத்து 58 ஆயிரத்து 197- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 

தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 16,304- ஆக உயர்ந்துள்ளது.  மாவட்ட வாரியாக பார்க்கும் போது,  அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 235 பேருக்கும், சென்னையில் 174 பேருக்கும், செங்கல் பட்டில் 135 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Next Story