வீடு புகுந்து 6 பவுன் தங்க நகை திருட்டு


வீடு புகுந்து 6 பவுன் தங்க நகை திருட்டு
x
தினத்தந்தி 10 Sep 2021 4:27 PM GMT (Updated: 2021-09-10T21:57:27+05:30)

முகவரி கேட்பது போல் நடித்து வீடு புகுந்து 6 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

முகவரி கேட்பது போல் நடித்து வீடு புகுந்து 6 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மூதாட்டியிடம் திருட்டு
புதுச்சேரி முதலியார்பேட்டை வைத்திலிங்க செட்டி தெருவை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 55). இவர் குபேர் பஜாரில் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருவாருரில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றார். வீட்டில் அன்பரசனின் தாயார் பேபி சரோஜா (82) மட்டும் இருந்தார்.
இந்தநிலையில் மர்மநபர்கள் 2 பேர் திடீரென மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் ஒரு துண்டு சீட்டை காட்டி முகவரி கேட்டுள்ளனர். பேபிசரோஜா அந்த முகவரி தெரியவில்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இதற்கிடையே வீட்டின் மேஜையில் வைத்திருந்த 6 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது.
வலைவீச்சு
இதனால் அதிர்ச்சி அடைந்த பேபி சரோஜா, இதுதொடர்பாக தனது மகனுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தார். உடனே அவர் புதுவை வந்து முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முகவரி கேட்பது போல் வந்த மர்மநபர்கள் 2 பேர் நகையை திருடி சென்றது தெரியவந்தது.  இதையடுத்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story