காஞ்சீபுரத்தில் 2 மாணவர்கள் உள்பட 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


காஞ்சீபுரத்தில் 2 மாணவர்கள் உள்பட 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 10 Sep 2021 8:43 PM GMT (Updated: 2021-09-11T02:13:30+05:30)

காஞ்சீபுரத்தில் 2 மாணவர்கள் உள்பட 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.


காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அடுத்த சிங்காடிவாக்கம் அரசு மேல்நிலை பள்ளியில் சுமார் 286 மாணவர்கள் படிக்கின்றனர்.  அரசு உத்தரவுப்படி கடந்த 1ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இந்தவேளையில், மாணவர்களுக்கு மதிய உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட சத்துணவு அமைப்பாளர் சரோஜாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து சுகாதாரத்துறை சார்பில் பள்ளியின் அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் 10 மற்றும் 11ம் வகுப்பை சேர்ந்த 2 மாணவர்களுக்கு கொரோனா உறுதியானது. இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். தொடர்ந்து, பள்ளி வளாகம், வகுப்பறைகள் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.
Next Story