அவிநாசியில் 3 டாக்டர்களுக்கு கொரோனா; அரசு மருத்துவமனை மூடப்பட்டது


அவிநாசியில் 3 டாக்டர்களுக்கு கொரோனா; அரசு மருத்துவமனை மூடப்பட்டது
x
தினத்தந்தி 11 Sep 2021 11:40 PM GMT (Updated: 2021-09-12T05:10:02+05:30)

அவிநாசியில் 3 டாக்டர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அரசு மருத்துவமனை மூடப்பட்டு உள்ளது.


அவிநாசி,

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் சேவூர் ரோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் 6 மருத்துவர்கள், 25க்கும் மேற்பட்ட செவிலியர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு கொரோனா பரிசோதனை மையமும் உள்ளது.

இந்நிலையில் இங்குள்ள டாக்டர்கள் 3 பேர், மருத்துவமனை உதவியாளர் என 4 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், அவிநாசி அரசு மருத்துவமனை நேற்று முதல் 3 நாட்களுக்கு மூடப்பட்டு உள்ளது. அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.                                                                                                                                     

Next Story