மாநில செய்திகள்

அடுத்தடுத்து நடைபெறவுள்ள தேர்தல்களில் தேமுதிக மீண்டும் எழுச்சி பெறும் - விஜயகாந்த் + "||" + DMDK will rise again in the elections Vijayakant

அடுத்தடுத்து நடைபெறவுள்ள தேர்தல்களில் தேமுதிக மீண்டும் எழுச்சி பெறும் - விஜயகாந்த்

அடுத்தடுத்து நடைபெறவுள்ள தேர்தல்களில் தேமுதிக மீண்டும் எழுச்சி பெறும் - விஜயகாந்த்
தமிழகத்தில் அடுத்தடுத்து நடைபெறவுள்ள தேர்தல்களில் தேமுதிக மீண்டும் எழுச்சி பெறும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
சென்னை,

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் 2 கட்டமாக அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேமுதிக 17ம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு கட்சித்தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், தேமுதிக துவங்கி 16 ஆண்டுகள் முடிவடைந்து நாளை17ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தோல்வி என்பது சறுக்கல் தானே தவிர அது வீழ்ச்சி அல்ல. எனவே, வருகிற உள்ளாட்சி தேர்தலி்ல்,அடுத்தடுத்து நடைபெறவுள்ள தேர்தல்களிலும் தேமுதிக பலத்தை நாம் அனைவருக்கும் நிச்சயமாக நிரூபிப்போம் என பதிவிட்டுள்ளார்.