மாநில செய்திகள்

கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலி + "||" + 2 elderly people were killed to Corona in Puduvai. Newly 124 people were infected.

கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலி

கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலி
புதுவையில் கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலியாகினர். புதிதாக 124 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
புதுச்சேரி
புதுவையில் கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலியாகினர். புதிதாக 124 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

124 பேர் பாதிப்பு

புதுச்சேரியில் காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 5 ஆயிரத்து 345 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 124 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 63 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது ஆஸ்பத்திரிகளில் 170 பேர், வீடுகளில் 730 பேர் என 900 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 80 பேர் குணமடைந்தனர்.

1,825 பேர் உயிரிழப்பு

அதேநேரத்தில் 2 முதியவர்கள் பலியாகி உள்ளனர். அதாவது கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அண்ணா சாலையை சேர்ந்த 61 வயது முதியவர், கிருஷ்ணாநகரை சேர்ந்த 68 வயது முதியவர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,825 ஆக அதிகரித்துள்ளது.
புதுவையில் தொற்று பாதிப்பு 2.32 சதவீதமாகவும், உயிரிழப்பு 1.46 சதவீதமாகவும், குணமடைவது 97.82 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் 1,532 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மாநிலத்தில் இதுவரை 8 லட்சத்து 77 ஆயிரத்து 120 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
------

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலி
கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலியாகினர்.
2. கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலி
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலியானார்கள். மேலும் நேற்று ஒரே நாளில் 102 பேருக்கு தொற்று ஏற்பட்டது.
3. கோவில்பட்டி பகுதியில் கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலி
கோவில்பட்டி பகுதியில் கொரோனாவுக்கு 2 முதியவர்கள பலியாகினர்.