தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு


தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு
x
தினத்தந்தி 23 Sep 2021 5:02 AM GMT (Updated: 2021-09-23T10:32:03+05:30)

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது.

சென்னை,

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், கடந்த 16-ந்தேதியில் இருந்து அதன் விலை தொடர்ந்து சரிந்து, ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. அதனைத் தொடர்ந்து நேற்று கிராமுக்கு ரூ.42-ம், பவுனுக்கு ரூ.336-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 413-க்கும், ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்து 304-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில்,  சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 200 குறைந்து ரூ. 35 ஆயிரத்து 104 விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 25 குறைந்து ரூ.4,388 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதைபோல வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசு குறைந்து 64 ரூபாய் 80 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒருகிலோ வெள்ளி 64,800 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Next Story