மாநில செய்திகள்

சூரிய சக்தியால் இயங்கும் சென்னை சென்ட்ரல் ரெயில்நிலையம். + "||" + Indian Railways' Chennai Central Station is Now Fully Powered by Solar Energy

சூரிய சக்தியால் இயங்கும் சென்னை சென்ட்ரல் ரெயில்நிலையம்.

சூரிய சக்தியால் இயங்கும் சென்னை சென்ட்ரல் ரெயில்நிலையம்.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் சூரிய சக்தியின் மூலம் 100 சதவீத ஆற்றல் தேவை இலக்கை அடைந்துள்ளது.
சென்னை

 சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் சூரிய சக்தியின்  மூலம் 100 சதவீத ஆற்றல் தேவை இலக்கை அடைந்துள்ளது.

புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.  ராமச்சந்திரன் சென்ட்ரல் ரெயில் நிலையம் என அழைக்கப்படும்  சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தின் நடைமேடை மற்றும்  தங்குமிடங்களில் நிறுவப்பட்ட சூரிய  தகடுகள் மூலம் 100 சதவீத ஆற்றல் தேவை இலக்கை அடைந்துள்ளது.

இது குறித்து மத்திய ரெயில்வே இனை மந்திரி அஷ்வினி வைஷ்னா  தனது டுவிட்டரில்  கூறி இருப்பதாவது:-

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு தேவையான   ஆற்றல்   சூரியசக்தியின் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த ரெயில்நிலையம் 1.5 மெகாவாட் சூரிய மின்சக்தியை நிறுவியுள்ளது. பகல் நேரத்தில் ரெயில்நிலையத்தின் அனைத்து மின் தேவைகளும் சூரிய சக்தியால் பூர்த்தி செய்யப்படுகிறது.

சென்னை சென்ட்ரல், எம்.எம்.சி வளாகம், காட்பாடி, தாம்பரம், மாம்பலம், கிண்டி, செங்கல்பட்டு புறநகர் நிலையங்கள் மற்றும் பல ரெயில்நிலையங்களிலும், ரெயில்வே அலுவலகங்களிலும்  சூரிய தகடுகள் நிறுவப்பட்டுள்ளது.  13 ரெயில்நிலையங்களில் உள்ள மின்விசிறிகள், பம்புகள் மற்றும் பிற மின் சாதனங்கள் போன்ற  அனைத்து மின் தேவைகளும் சூரிய மின்சக்தியின் மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றன
    
 காற்றாலைகள் மூலம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்துவதில் கவனம் செலுத்தி வரும் தெற்கு ரயில்வே,  மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தாரில் (கங்கை கொண்டான் மற்றும் கடம்பூர் ரெயில் நிலையங்களுக்கு அருகில்) ரெயில்வே தேவைக்காக காற்றாலை ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

2019-20 ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் இருந்து ரூ .16.64 கோடி சேமிப்பை தெற்கு ரெயில்வே அடைந்திருக்கிறது. மின்சார செலவுகளை குறைக்கவும் மற்றும் மின்தேவைக்காகவும் தொலைநோக்குடன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை விரைவாகக் செயல்படுத்த ரெயில்வே உறுதிபூண்டுள்ளது என அதில் கூறி உள்ளார்.