என்ஜினீயரிங், நர்சிங், பட்ட படிப்புகளுக்கு சென்டாக் தரவரிசை பட்டியல்


என்ஜினீயரிங், நர்சிங், பட்ட படிப்புகளுக்கு சென்டாக் தரவரிசை பட்டியல்
x
தினத்தந்தி 24 Sep 2021 7:39 PM GMT (Updated: 24 Sep 2021 7:39 PM GMT)

என்ஜினீயரிங், நர்சிங், பட்ட படிப்புகளுக்கு சென்டாக் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

என்ஜினீயரிங், நர்சிங், பட்ட படிப்புகளுக்கு சென்டாக் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
 சென்டாக் தரவரிசை
புதுவையில் மருத்துவம், என்ஜினீயரிங், நர்சிங், கலை அறிவியல் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கு சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதையொட்டி நீட் அல்லாத படிப்புகளுக்கும் விண்ணப்பம் பெறப்பட்டது. அதில் அவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் வரைவு தரவரிசை பட்டியல் தற்போது சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்டாக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நீட் தேர்வு அல்லாத படிப்புகளான பி.டெக்., பி.எஸ்சி., (வேளாண்மை), கால்நடை மருத்துவம், நர்சிங், பி.பார்ம், சட்டம், கலை மற்றும் அறிவியல் படிப்புகள் ஆகியவற்றுக்கான வரைவு தரவரிசை பட்டியல் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 10 ஆயிரத்து 684 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 9 ஆயிரத்து 442 பேர் தங்களது  விருப்ப பாடங்களை தேர்வு செய்துள்ளனர். கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களில் 7 ஆயிரத்து 979 பேர் மட்டுமே விருப்ப பாடங்களை தேர்வு செய்துள்ளனர். மற்றவர்கள் தங்கள் விருப்ப பாடங்களை உடனடியாக சமர்ப்பிக்கவேண்டும். 
ஆட்சபேனை
தரவரிசை பட்டியலில் ஆட்சேபனை ஏதும் இருந்தால் வருகிற 27-ந்தேதி மாலை 5 மணிக்குள் தெரிவிக்கவேண்டும். இதுதொடர்பாக மாணவர்களுக்கு குறுஞ்செய்திகளும் அனுப்பப்பட்டுள்ளன. 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story