தமிழகத்தில் வடமாவட்டங்கள், தென் மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தில் வடமாவட்டங்கள், தென் மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 8 Oct 2021 11:48 PM GMT (Updated: 8 Oct 2021 11:48 PM GMT)

தமிழகத்தில் வடமாவட்டங்கள், தென் மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

தென்மேற்கு பருவகாற்று காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. 

அதன் தொடர்ச்சியாக தென்மேற்கு பருவகாற்று காரணமாக தமிழகத்தில் இன்று வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபடமாக 26 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.

வரும் 10-ம் தேதி மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால் அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் இன்று முதல் 10-ம் தேதி வரை பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story