மாநில செய்திகள்

மெகா தடுப்பூசி முகாம்; இதுவரை 14.56 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது + "||" + Tamil Nadu organises fifth mega vaccination drive with 30,000 camps in place

மெகா தடுப்பூசி முகாம்; இதுவரை 14.56 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது

மெகா தடுப்பூசி முகாம்; இதுவரை 14.56 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது
ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, பல லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, பல லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த மாதம் 12-ந்தேதி தமிழகத்தில் முதல் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இன்று 5-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. சுமார் 30 ஆயிரம் இடங்களில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாம்களில் இதுவரை 14.56 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. பிரான்ஸ் பிரதமருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
ஐரோப்பிய நாடுகளில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
2. காஞ்சீபுரம் மாவட்டத்தில் 500 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் - இன்று நடக்கிறது
காஞ்சீபுரம் மாவட்டத்தில் இன்று 500 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
3. ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
4. டெல்லியில் இளைஞர் காங்கிரசார் டார்ச் லைட் ஏந்தி பேரணி
லகிம்பூர் வன்முறையை கண்டித்து டெல்லியில் இளைஞர் காங்கிரசார் டார்ச் லைட் ஏந்தி பேரணியாக சென்றனர்.
5. கர்நாடகாவில் மேலும் 373- பேருக்கு கொரோனா
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 373- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.