மாநில செய்திகள்

சென்னை: ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து ச‌சிகலா மரியாதை + "||" + Chennai: Sasikala paid homage to the MGR statue at Ramavaram garden by wearing a garland

சென்னை: ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து ச‌சிகலா மரியாதை

சென்னை: ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர்  சிலைக்கு மாலை அணிவித்து ச‌சிகலா மரியாதை
சென்னை, ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து ச‌சிகலா மரியாதை செலுத்தினார்.
சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர் அதிமுக கட்சி தொடங்கி இன்றுடன் நாற்பத்தி ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்து, 50 ஆண்டு தொடங்குகிறது. இதனை அடுத்து அதிமுக சார்பில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில்,  அதிமுக பொன்விழாவையொட்டி சசிகலா எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் அதிமுக கொடியை ஏற்றினார். பொன்விழா ஆண்டு கொடியேற்றம் நிகழ்வையொட்டி கல்வெட்டு திறக்கப்பட்டது. தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவில்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.

தி.நகரில் உள்ள நினைவு இல்லத்தில் பொன்விழா ஆண்டு கொடியேற்றம் நிகழ்வையொட்டி கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், சென்னை, ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர்  சிலைக்கு மாலை அணிவித்து ச‌சிகலா மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் உள்ள அவரது உருவப் படத்திற்கு மலர்தூவி சசிகலா மரியாதை செலுத்தினார். மேலும் அதிமுக பொன் விழா சிறப்பு மலரையும் சசிகலா வெளியிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் தக்காளி விலை ரூ.90 வரை விற்பனை
சென்னையில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது.
2. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் 32-வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
3. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-பெங்கால் ஆட்டம் ‘டிரா’
சென்னை-பெங்கால் இடையேயான கால்பந்து போட்டி சமனில் முடிந்தது.
4. சென்னையில் மழை பாதிப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
5. தொடர் மழை: சென்னை வாகன போக்குவரத்தின் தற்போதைய நிலவரம்
சென்னையில் தொடர் மழையால் வாகன போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.