மாநில செய்திகள்

ஆபாச படம் வெளியிட்டதாக தி.மு.க. பிரமுகர் மீது நடிகை காயத்ரி ரகுராம் பரபரப்பு புகார் + "||" + DMK alleges release of pornographic film Actress Gayatri Raghuram's sensational complaint against Pramukar

ஆபாச படம் வெளியிட்டதாக தி.மு.க. பிரமுகர் மீது நடிகை காயத்ரி ரகுராம் பரபரப்பு புகார்

ஆபாச படம் வெளியிட்டதாக தி.மு.க. பிரமுகர் மீது நடிகை காயத்ரி ரகுராம் பரபரப்பு புகார்
இணைய தளங்களில் தன்னை பற்றிய ஆபாசபடங்களை வெளியிட்டுள்ளதாக தி.மு.க. பிரமுகர் மீது நடிகை காயத்ரி ரகுராம் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்தார்.
சென்னை,

பா.ஜ.க மாநில கலை மற்றும் கலாசார பிரிவு தலைவர் நடிகை காயத்ரி ரகுராம். இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வக்கீல்கள் பிரிவு தலைவர் பால் கனகராஜூடன் வந்து பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.


பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

தி.மு.க. பிரமுகர் ஜெயச்சந்திரன் என்பவர், தனது டுவிட்டர் பக்கத்தில், என்னுடைய வீடியோவை ஆபாசமாக சித்தரித்து பதிவிட்டுள்ளார். பா.ஜ.க. தலைவர் பற்றியும் ஆபாசமாக பேசி உள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நானும், பா.ஜ.க.வை சேர்ந்த பெண் நிர்வாகிகளும் மாட்டு வண்டியில் சென்று கொண்டிருந்தபோது, வண்டி சறுக்கி சாய்ந்துவிட்டது. அப்போது சில பெண் நிர்வாகிகள் கீழே விழுந்து விட்டனர். அவர்களது காலுக்குள் சிக்கிய எனது புடவையும் சற்று விலகி விட்டது. அதை யாரோ சிலர் வீடியோ படமாக எடுத்து இணையதளங்களில் பதிவிட்டு விட்டனர். அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளேன்.

வருத்தம்

பா.ஜ.க.வில் நான் மதிக்கக்கூடிய தலைவர்களோடு, குறிப்பிட்ட ஆபாச வீடியோவையும் இணைத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறார்கள். பெண்கள் சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சினைகளுக்கும் கருத்து தெரிவிக்கும் கனிமொழி எம்.பி., இந்த பிரச்சினை குறித்து கருத்து சொல்லாதது வருத்தத்திற்குரிய ஒன்றாகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. சினேகாவை ஏமாற்றிய ஏற்றுமதி நிறுவனம் - போலீசில் புகார்
பிரபல நடிகையாக இருக்கும் சினேகா, தன்னிடம் தனியார் ஏற்றுமதி நிறுவனம் ஒன்று பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டதாக புகார் கொடுத்து இருக்கிறார்.
2. கட்டுப்பாட்டு அறைக்கு ஒரே நேரத்தில் 50 பேர் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்: சென்னை மாநகராட்சி கமிஷனர்
ரிப்பன் மாளிகையில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரே நேரத்தில் 50 பேர் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.
3. சாலை திடீரென சரிந்து சேதமடைந்ததால் பரபரப்பு
கடலூரில் சாலை திடீரென சரிந்து சேதமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
4. கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் குழாய் வெடித்ததால் பரபரப்பு
கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் குழாய் வெடித்ததால் நோயாளிகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
5. ‘அன்பு செல்வன்’ படக்குழு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் கவுதம் மேனன் புகார்
இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் தற்போது ‘வெந்து தணிந்தது காடு’ படம் தயாராகி வருகிறது, இப்படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார்.