மாநில செய்திகள்

பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கும்,நலம் விசாரித்த நண்பர்களுக்கும் நன்றி - ரஜினிகாந்த் + "||" + Thanks to the fans who prayed, thanks to the friends who inquired about the well-being - Rajinikanth

பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கும்,நலம் விசாரித்த நண்பர்களுக்கும் நன்றி - ரஜினிகாந்த்

பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கும்,நலம் விசாரித்த நண்பர்களுக்கும் நன்றி - ரஜினிகாந்த்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த், சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பின்பு நலமுடன் இருப்பதாக ஆடியோ வெளியிட்டுள்ளார்.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்துக்கு கடந்த 28-ந் தேதி திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. தலைவலி மற்றும் லேசான மயக்கம் காரணமாக அவர் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் சிறிய அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

அதனைத்தொடர்ந்து சிகிச்சை மூலம் அந்த அடைப்பு சரிசெய்யப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் ஆஸ்பத்திரியிலேயே நடிகர் ரஜினிகாந்த் ஓய்வு எடுத்து வந்தார். டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த அவரை, அவரது மனைவி லதா மற்றும் குடும்பத்தினர் உடனிருந்து கவனித்து வந்தனர்.

இந்தநிலையில் உடல்நிலை தேறியதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு வீடு திரும்பினார். முக கவசம் அணிந்தவாறு சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்திற்கு காரில் ரஜினிகாந்த் வந்தார். அப்போது மழை பெய்ததால் உதவியாளர் ஒருவர் குடை பிடித்தபடி ரஜினிகாந்தை வீட்டிற்கு அழைத்து வந்தார்.

வீட்டின் வாசலில் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றார். அங்கு கூடியிருந்த ரசிகர்களை பார்த்து ரஜினிகாந்த் கையசைத்தவாறு வீட்டிற்குள் சென்றார். அப்போது ரஜினியின் மகள்கள், பேரன்கள் மற்றும் உறவினர்கள் உடனிருந்தனர்.

 இந்நிலையில் தாம் நலமுடன் இருப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் ஆடியோ பதிவு வெளியிட்டுள்ளார் .

தனது ஆரோக்கியத்திற்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி , தனது நலன் பற்றி விசாரித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி என அவர் அந்த ஆடியோ பதிவில் தெரிவித்துள்ளார் .

தொடர்புடைய செய்திகள்

1. போயஸ் கார்டனில் திரண்டிருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் பொங்கல் வாழ்த்து..!
சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் திரண்டிருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.
2. தெய்வமே என ரசிகர்கள் கோஷம்...! நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து
சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினி ரசிகர்கள் அவர் வீட்டின் முன்பு திரண்டனர்.
3. ரஜினிகாந்திற்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து
ரஜினிகாந்த் நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து ரசிகர்களை மகிழ்விக்க மனதார வாழ்த்துவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
4. நடிகர் ரஜினிகாந்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் வாழ்த்து
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 72-வது வயதில் இன்று அடியெத்து வைத்துள்ள நிலையில், அவருக்கு பல்வேறு தரப்பினரும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
5. ரஜினிகாந்த் நடித்த ‘முரட்டுக்காளையை மறக்க முடியாது’ - ஜூடோ ரத்னம்
தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஸ்டண்ட் மாஸ்டர்களில் முக்கியமானவர் ஜூடோ ரத்னம். இவர் இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு சண்டை காட்சிகள் அமைத்து கொடுத்து இருக்கிறார்.