நாகை, காரைக்காலில் 3- ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்


நாகை, காரைக்காலில் 3- ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்
x
தினத்தந்தி 10 Nov 2021 4:35 PM GMT (Updated: 10 Nov 2021 4:35 PM GMT)

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 7 துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கடலூர்,

தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புதுச்சேரிக்கு கிழக்கு தென் கிழக்கே 420 கி.மீட்டர்  சென்னைக்கு கிழக்கு தென் கிழக்கே 430 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.

இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து 11ம் தேதி மாலை வட தமிழகத்தில் காரைக்காலுக்கும் ஆந்திரா மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டா இடையே புதுச்சேரிக்கு வடக்கே கரை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதன் காரணமாக சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுபள்ளி, புதுச்சேரி, காரைக்கால் வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் துறைமுகங்களில் 3 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.


Next Story