தமிழகத்தில் வெள்ள நிவாரண பணிகளை துரிதப்படுத்த வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு


தமிழகத்தில் வெள்ள நிவாரண பணிகளை துரிதப்படுத்த வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
x
தினத்தந்தி 11 Nov 2021 6:57 AM GMT (Updated: 11 Nov 2021 6:57 AM GMT)

தமிழகத்தில் வெள்ள நிவாரண பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று அமைச்சர்கள், சிறப்பு அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது சென்னைக்கு அருகே இன்று மாலை கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது. 

தற்போது சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையின் முக்கிய சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

இந்நிலையில், தமிழகத்தில் வெள்ள நிவாரண பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று அமைச்சர்கள் மற்றும் மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

மழை பாதிப்பால் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தரமான உணவு, மருத்துவ வசதிகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பயிர் சேதங்களை தவிர்க்கும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Next Story