மாநில செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சசிகலா நேரில் ஆறுதல் நிவாரண பொருட்கள் வழங்கினார் + "||" + Sasikala personally distributed relief items to the people affected by the floods

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சசிகலா நேரில் ஆறுதல் நிவாரண பொருட்கள் வழங்கினார்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சசிகலா நேரில் ஆறுதல் நிவாரண பொருட்கள் வழங்கினார்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சசிகலா நேரில் ஆறுதல் நிவாரண பொருட்கள் வழங்கினார்.
சென்னை,

சென்னையில் மழை வெள்ள பாதிப்பு பகுதிகளை சசிகலா, டெம்போ வேனில் சென்று நேற்று பார்வையிட்டார். தியாகராயநகர் கிரியப்பா சாலை, சைதாப்பேட்டை ஆட்டுத்தொட்டி, ஓட்டேரி, வடபழனி, கே.கே.நகர், கோட்டூர்புரம், கோயம்பேடு உள்பட பல பகுதிகளில் உள்ள தெருக்களில் நடந்து சென்று மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.


பின்னர் அவர்களுக்கு வேட்டி, சேலைகள், பிஸ்கட் பாக்கெட், பால் போன்ற நிவாரண பொருட்களை வழங்கினார்.

பின்னர் சசிகலா வேனில் இருந்தவாறு பேசியதாவது:-

மழைவெள்ளத்தால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளார்கள். பயிர்கள் நாசமாகி விவசாயிகளும் கஷ்டத்தில் இருக்கிறார்கள். வீடுகளை இழந்த மக்களுக்கும், விவசாயிகளுக்கும், தண்ணீரில் தத்தளிக்கும் மக்களை காப்பாற்றவும் மத்திய அரசு தமிழகத்துக்கு வேண்டிய நிதியை விரைவாக கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மக்களை காப்பற்றத்தான் அரசுகள் இருக்கிறது. மத்திய அரசும், மாநில அரசும் விரைவாக செயல்பட்டு மக்களை காப்பாற்ற வேண்டும். மத்திய அரசு மிக விரைவில் நிவாரண நிதியை தமிழகத்துக்கு கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

அவர் நேற்று பயணித்த ‘டெம்போ’ வேனிலும் அ.தி.மு.க. கொடி பொருத்தப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. சசிகலா மீதான புகாரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 2-ந்தேதி ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும்: சைதாப்பேட்டை கோர்ட்டு
சசிகலா மீதான புகாரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 2-ந்தேதி ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று சைதாப்பேட்டை கோர்ட்டு உத்தரவு பிரபித்து உள்ளது.
2. மொளச்சூர் முருகன் கோவிலுக்கு ரூ.35 லட்சத்தில் வெள்ளி கவசங்கள் - சசிகலா வழங்கினார்
மொளச்சூர் முருகன் கோவிலுக்கு ரூ.35 லட்சத்தில் வெள்ளி கவசங்கள் - சசிகலா வழங்கினார்.
3. பொங்கல் பரிசு தொகுப்பு மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது சசிகலா கண்டனம்
பொங்கல் பரிசு தொகுப்பு மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது சசிகலா கண்டனம்.
4. தி.மு.க.வை மக்கள் முற்றிலுமாக புறக்கணிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை - சசிகலா அறிக்கை
எம்.ஜி.ஆர். நினைவிடம் செல்ல தனக்கு அனுமதி மறுத்துள்ள நிலையில், தி.மு.க.வை மக்கள் முற்றிலுமாக புறக்கணிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று சசிகலா கூறியுள்ளார்.
5. ஓ.பி.எஸ். சொன்ன குட்டிக்கதை பாமர மக்களுக்கு பொருந்தும், சசிகலாவிற்கு பொருந்தாது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
சசிகலா இல்லாமல் அதிமுக நன்றாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. சசிகலாவிற்கு மன்னிப்பே கிடையாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.