மாநில செய்திகள்

சென்னையில் 2 இன்ஸ்பெக்டர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை + "||" + Anti-corruption raid on 2 inspectors' homes

சென்னையில் 2 இன்ஸ்பெக்டர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னையில் 2 இன்ஸ்பெக்டர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
சென்னையில் பணியாற்றும் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தியது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை,

சென்னை கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சாம்வின்சென்ட். இவரின் வீடு கீழ்ப்பாக்கம் காவல் குடியிருப்பில் இருக்கிறது. இன்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், சாம்வின்சென்ட் வீட்டுக்கு திடீரென சென்று அதிரடி சோதனை நடத்தினர். 

இன்ஸ்பெக்டர் சாம்வின்சென்ட் வீட்டில் சோதனை நடந்து கொண்டிருந்தபோதே, சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிவரும் சரவணன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. 

ஒரே நேரத்தில் சென்னையில் பணியாற்றும் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தியது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - ரூ.18 லட்சம் பறிமுதல்
அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அதிரடி சோதனயில் கணக்கில் வராத 18 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
2. இளங்கோவன் வீட்டில் இருந்து 21.2 கிலோ தங்கம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை
ஆர்.இளங்கோவன் அதிமுகவின் சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக உள்ளார்.
3. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சம்மன்
கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி இருந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.