கைதிகள் தயாரிக்கும் பொருட்களில் ரூ.100 கோடி ஊழல்


கைதிகள் தயாரிக்கும் பொருட்களில் ரூ.100 கோடி ஊழல்
x
தினத்தந்தி 16 Nov 2021 10:58 PM GMT (Updated: 2021-11-17T04:28:10+05:30)

கைதிகள் தயாரிக்கும் பொருட்களில் ரூ.100 கோடி ஊழல் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல்.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் சிறை கைதிகள் உரிமைகள் மைய இயக்குனர் வக்கீல் புகழேந்தி தாக்கல் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “மதுரை மத்திய சிறையில் கைதிகளால் தபால் அனுப்புவதற்கான உறைகள், அட்டைகள் போன்ற ‘ஸ்டேஷனரி' பொருட்கள், மருத்துவ உதவிப்பொருட்கள் தயாரிக்கப்பட்டு அவை பல்வேறு அரசு அலுவலகங்கள், ஆஸ்பத்திரிகள், கோர்ட்டுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக போலியாக கணக்கு தயாரிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை நடந்துள்ள இந்த ஊழலில் சுமார் ரூ.100 கோடி வரை முறைகேடு நடந்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் இது தெரியவந்துள்ளது.

சிறை கைதிகளால் அதிகமான பொருட்கள் தயாரிக்கப்பட்டதாகவும், அதற்காக சிறை கைதிகளுக்கு ஊதியம் கொடுக்கப்பட்டதாகவும் கூறி போலியான கணக்கு காண்பிக்கப்பட்டு அதன்மூலம் கோடிக்கணக்கில் பணம் சுரண்டப்பட்டுள்ளது. இந்த ஊழலில் சிறைத்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது.

இதுதொடர்பாக சிறைத்துறை டி.ஜி.பி., தமிழக உள்துறை செயலாளருக்கு புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இதுகுறித்து லஞ்சஒழிப்புத்துறை விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என்று கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Next Story