மாநில செய்திகள்

அதி கனமழை எச்சரிக்கை ; சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை + "||" + Holidays for schools and colleges in districts including Chennai

அதி கனமழை எச்சரிக்கை ; சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

அதி கனமழை எச்சரிக்கை ; சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
அதி கனமழை எச்சரிக்கையால் சென்னை மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. வங்கக்கடலில் கடந்த 13-ந்தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மெதுவாக நகர்ந்து கொண்டு வருகிறது. அது தற்போது, மேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடற்கரை பகுதியை நாளை (வியாழக்கிழமை) நெருங்குகிறது.

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இந்த நிகழ்வுகள் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் நல்ல மழை பெய்து இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.   

இதனை தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களுக்கும் நாளை ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கையால் சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கனமழை எச்சரிக்கை: தமிழகத்தில் எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..?
தமிழகத்தில் பெய்து வரும் அதிகனமழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
2. கனமழை எச்சரிக்கை; உத்தரகாசியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை எச்சரிக்கை காரணமாக உத்தரகாசியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.