மாநில செய்திகள்

செல்போன் பேசியதை தாய் கண்டித்ததால் 8-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை + "||" + An 8th grade student committed suicide by hanging after his mother condemned him for talking on a cell phone

செல்போன் பேசியதை தாய் கண்டித்ததால் 8-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

செல்போன் பேசியதை தாய் கண்டித்ததால் 8-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
செல்போன் பேசியதை தாய் கண்டித்ததால் 8-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு,

ஈரோடு மாணிக்கம்பாளையம் ரோடு பெரிய வலசு சுப்பிரமணிய நகர் பகுதியை சேர்ந்தவர் சிவா. இவருடைய மனைவி அம்பிகா. தறிப்பட்டறை தொழிலாளி. இவர்களுடைய மகள் பாக்கியலட்சுமி (வயது 13). சிவா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். பாக்கியலட்சுமி பெரியவலசு பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.


மாணவி பாக்கியலட்சுமி அடிக்கடி செல்போன் பேசி வந்துள்ளார். இதனால் அவருடைய தாய் அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் பாக்கியலட்சுமி மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் அம்பிகா வேலைக்கு சென்று விட்டார்.

தூக்குப்போட்டு தற்கொலை

விடுமுறை என்பதால் பாக்கியலட்சுமி வீட்டில் இருந்தார். வேலைக்கு சென்ற அம்பிகா மதியம் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உள்புறமாக தாழிடப்பட்டு இருந்தது. நீண்ட நேரம் தட்டியும் பாக்கியலட்சுமி கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது பாக்கியலட்சுமி படுக்கை அறையில் சேலையால் தூக்குப்போட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அம்பிகா மகளை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே பாக்கியலட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மற்றொரு சம்பவம்

இதேபோல் கரூரில் செல்போனில் அதிகநேரம் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் கிருத்திகா (19) என்ற கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. 6-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
குன்றத்தூரில் 6-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள்.
2. 6-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
குன்றத்தூரில் 6-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள்.
3. செல்போனில் படம் பார்த்ததை தாய் கண்டித்ததால் 7-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
செல்போனில் படம் பார்த்ததை தாய் கண்டித்ததால் 7-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
4. விடுதியில் வேலை செய்ய கூறியதால் பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை
விடுதியில் வேலை செய்ய கூறியதால் பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை பெண் வார்டன் கைது.
5. மகள்களுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட ஆட்டோ டிரைவர்
தனது மகள்களுடன் ஆட்டோ டிரைவர் ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.