மாநில செய்திகள்

காதல் வலை வீசி 17 வயது மாணவரை கடத்தி சென்ற 3 பெண்கள் - பெற்றோர் பரபரப்பு புகார் + "||" + 3 girls kidnapped a 17 year old student Parents complain

காதல் வலை வீசி 17 வயது மாணவரை கடத்தி சென்ற 3 பெண்கள் - பெற்றோர் பரபரப்பு புகார்

காதல் வலை வீசி 17 வயது மாணவரை கடத்தி சென்ற 3 பெண்கள் -  பெற்றோர் பரபரப்பு புகார்
காதல் வலை வீசி 17 வயது மகனை கடத்திச் சென்றதாக 3 பெண்கள் மீது பெற்றோர் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி,

காதல் வலை வீசி தங்களது 17 வயது மகனை கடத்திச்சென்று விட்டதாக 3 பெண்கள் மீது தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியை சேர்ந்த பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அதில்,  கடந்த ஒன்றை ஆண்டுகளுக்கு முன் மகன் காணாமல் போனதாகவும் பக்கத்து வீட்டில் வசித்து வந்த கணவரை இழந்த இளம்பெண் அழைத்துச்சென்று தற்போது அவரது தாய், சகோதரி மற்றும் மகனுடன் வசித்து வருவதாகவும் பெற்றோர் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

காதலிப்பதாகக் கூறி 17 வயது மகனை கடத்திச் சென்றதாக 3 பெண்கள் மீது பெற்றோர் புகார் அளித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.