மாநில செய்திகள்

சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை + "||" + Rain Lashes Parts of Chennai

சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை
சென்னையில் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் வரும் நாட்களில் தமிழக கரையை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக, சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கிண்டி, வேளச்சேரி, அடையாறு, நீலாங்கரை, கந்தஞ்சாவடி, கொட்டிவாக்கம், தாம்பரம், பல்லாவரம், பொரூர், பெருங்குளத்தூர் உள்பட நகரின் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்திலும் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.

அதிகாலை முதல் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகளும், அலுவலகம் செல்வோரும் சற்று சிரமமடைந்துள்ளனர்.  
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. டெல்டா, தென்கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு...!
டெல்டா மற்றும் தென்கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
3. அறுவடைக்கு தயரான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின- விவசாயிகள் கண்ணீர்; சேதம் கணக்கெடுப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது.
4. தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
ஜனவரி 4ம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்களில் மட்டும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு
5. கொட்டி தீர்த்த கனமழை ...! சென்னையில் வெள்ளத்தில் மிதந்த 145 இடங்கள் ; 4 சுரங்கப்பாதைகள் மூடல்
சென்னையில் நேற்று மதியம் முதல் இரவு வரை சுமார் 10 மணிநேரம் விடாமல் கொடூரமாக மழை பெய்தது