மாநில செய்திகள்

முதன்முறையாக திருச்செந்தூர் கோவிலுக்குள் புகுந்த மழைநீர் + "||" + Rainwater entering the Thiruchendur temple for the first time

முதன்முறையாக திருச்செந்தூர் கோவிலுக்குள் புகுந்த மழைநீர்

முதன்முறையாக திருச்செந்தூர் கோவிலுக்குள் புகுந்த மழைநீர்
கனமழை காரணமாக திருச்செந்தூர் கோவிலுக்குள் வெள்ள நீர் புகுந்தது.தூத்துக்குடி,

நெல்லை மற்றும்  திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய இடைவிடாத பலத்த கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து 3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் கன மழையினால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

கனமழை காரணமாக திருச்செந்தூர் கோவிலுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்தது. பக்தர்கள் கோவிலை விட்டு வெளியே வரமுடியாத நிலையில் தவித்து வருகின்றனர். 

கோவிலின் உள் மற்றும் வெளி ப்ரகாரங்களில்  மழை நீர் வரத்து அதிகரித்து கொண்டேயிருப்பதால் ஊழியர்கள் மழை நீரை வெளியேற்றும் பணியில்  ஈடுபட்டு வருகின்றனர். சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மழை நீர் தேங்கியுள்ளது இதுவே முதன்முறையாகும்.