மாநில செய்திகள்

நாடார் சமுதாயத்தை இழிவாக பேசிய கிறிஸ்தவ பெண் மத போதகர் கைது + "||" + Christian woman pastor arrested for insulting Nadar community

நாடார் சமுதாயத்தை இழிவாக பேசிய கிறிஸ்தவ பெண் மத போதகர் கைது

நாடார் சமுதாயத்தை இழிவாக பேசிய கிறிஸ்தவ பெண் மத போதகர் கைது
நாடார் சமுதாயத்தை இழிவாக பேசிய கிறிஸ்தவ பெண் மத போதகர் கைது செய்யப்பட்டார்.
பூந்தமல்லி,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நடந்த ஆராதனையில் சோமங்கலம் அடுத்த வரதராஜபுரத்தை சேர்ந்த கிறிஸ்தவ பெண் மதபோதகர் பியூலா செல்வராணி நாடார் சமுதாயம் குறித்து இழிவாக பேசியதாக தெரிகிறது. அவரை கைது செய்ய வேண்டும் என்று நாடார் சமுதாயத்தினர் சார்பில் குன்றத்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.


போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் பல்வேறு போலீஸ் நிலையங்களிலும் இது தொடர்பாக புகார் செய்யப்பட்டது.

கைது

மேலும் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் பியூலா செல்வராணி மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் அவர் சோமங்கலத்தில் இருப்பதாக வந்த தகவலையடுத்து குன்றத்தூர் போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மாணவ-மாணவிகளை சாதியை சொல்லி திட்டிய அரசு பள்ளி தலைமை ஆசிரியை கைது
மாணவ, மாணவிகளை சாதியை சொல்லி திட்டிய விவகாரத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியை கைது செய்யப்பட்டார்.
2. பிரபல ரவுடி பினு அதிரடி கைது பட்டாகத்தியால் கேக் வெட்டும் கலாசாரத்தை அறிமுகப்படுத்தியவர்
சென்னையில் பிரபல ரவுடி பினு அதிரடியாக கைது செய்யப்பட்டார். பட்டாகத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் விழாவை பொது இடத்தில் கொண்டாடும் கலாசாரத்தை சென்னையில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.
3. மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்தவர்: ராஜேந்திரபாலாஜி மீது புகார் கூறிய அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி கைது
முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது புகார் கூறிய அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகியும் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.
4. ரூ.80 ஆயிரத்துக்கு ஆண் குழந்தையை விற்ற தாய் கைது
செங்குன்றத்தில் ரூ.80 ஆயிரத்துக்கு ஆண் குழந்தையை விற்ற தாய் உள்பட 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
5. 3 சிறுமிகள் படுகொலை; அரியானாவில் சீரியல் கில்லர் கைது
அரியானாவில் 3 சிறுமிகள் படுகொலை சம்பவத்தில் சீரியல் கில்லர் கைது செய்யப்பட்டார்.