தேர்தல் வழக்கை நிராகரிக்கக்கோரி அமைச்சர் துரைமுருகன் வழக்கு - ஐகோர்ட்டு நோட்டீஸ்


தேர்தல் வழக்கை நிராகரிக்கக்கோரி அமைச்சர் துரைமுருகன் வழக்கு - ஐகோர்ட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 3 Dec 2021 6:57 PM GMT (Updated: 3 Dec 2021 6:57 PM GMT)

தேர்தல் வழக்கை நிராகரிக்கக்கோரி அமைச்சர் துரைமுருகன் வழக்கு - ஐகோர்ட்டு நோட்டீஸ்.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் காட்பாடி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட துரைமுருகன் வெற்றி பெற்றார். இவரது வெற்றியை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த வி.ராமு, சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். அதில், “ஒரு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படவில்லை. அதனால், துரைமுருகன் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் துரைமுருகன் சார்பில், இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தேர்தல் வெற்றி தொடர்பாக மனுதாரர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. அதில் உண்மை இல்லை. எனவே இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். துரைமுருகன் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டார்.

இதையடுத்து துரைமுருகன் தாக்கல் செய்துள்ள இந்த மனுவுக்கு, அ.தி.மு.க. வேட்பாளர் வி.ராமு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வருகிற 21-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Next Story