மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று 13-வது மெகா தடுப்பூசி முகாம் + "||" + Today is the 13th mega vaccination camp across Tamil Nadu

தமிழகம் முழுவதும் இன்று 13-வது மெகா தடுப்பூசி முகாம்

தமிழகம் முழுவதும் இன்று 13-வது மெகா தடுப்பூசி முகாம்
தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் 13-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
சென்னை, 

தமிழகம் முழுவதும் 13-வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த தடுப்பூசி முகாமில் காலக்கெடு முடிந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 

அந்தவகையில் இதுவரை தமிழகத்தில் 83 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருக்கின்றனர். தற்போது 1 கோடியே 30 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

அதேபோல் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று 200 வார்டுகளிலும் 1,600 இடங்களில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 2 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், கையிருப்பில் 11 லட்சத்து 83 ஆயிரத்து 905 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

சென்னையில் 10 லட்சத்து 39 ஆயிரத்து 704 பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். அவர்களுக்கு இந்த முகாமில் முன்னுரிமை அளிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் இன்று மேலும் 35,756 பேருக்கு கொரோனா தொற்று
மராட்டியத்தில் இன்று மேலும் 35,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
2. கர்நாடகாவில் இன்று 48,905 பேருக்கு கொரோனா தொற்று....!
கர்நாடகாவில் இன்று மேலும் 48,905 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. மராட்டியத்தில் இன்று 33,914 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று 33,914 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கர்நாடகாவில் இன்று 46,426 பேருக்கு கொரோனா தொற்று....!
கர்நாடகாவில் இன்று மேலும் 46,426 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. தமிழகம் முழுவதும் 600 மையங்களில் இன்று பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம்...!
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.