ஜெயலலிதா படம் மீது கருணாநிதியின் படம்; அம்மா உணவகத்தில் சர்ச்சை


ஜெயலலிதா படம் மீது கருணாநிதியின் படம்; அம்மா உணவகத்தில் சர்ச்சை
x
தினத்தந்தி 7 Dec 2021 4:40 PM IST (Updated: 7 Dec 2021 4:40 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் அம்மா உணவகத்தில் இருந்த ஜெயலலிதா படத்தின் மீது, கருணாநிதி மற்றும் முதல்-அமைச்சர் ஸ்டாலின் படங்களை தி.மு.க.வினர் ஒட்டியது பரபரப்பு ஏற்படுத்தியது.


சென்னை,

சென்னையில் திருவேற்காடு பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உருவ படம் உள்ளது.  இதனை மறைத்து, முன்னாள் முதல்-அமைச்சரான கருணாநிதி மற்றும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோரது உருவ
படங்களை தி.மு.க.வினர் ஒட்டியுள்ளனர்.  இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அ.தி.மு.க.வினர், தி.மு.க.வினரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சமரசத்தில் ஈடுபட்டனர்.  இதன்பின்னர், ஜெயலலிதா படம் மீது ஒட்டப்பட்டிருந்த கருணாநிதியின் படம் அகற்றப்பட்டது.


Next Story