கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை முக கவசம், ஊசிகள் வாங்க ரூ.32 கோடி அனுமதி அரசாணை வெளியீடு


கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை முக கவசம், ஊசிகள் வாங்க ரூ.32 கோடி அனுமதி அரசாணை வெளியீடு
x
தினத்தந்தி 9 Dec 2021 9:54 PM GMT (Updated: 2021-12-10T03:24:10+05:30)

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக ஊசிகள், முக கவசம் வாங்க ரூ.32 கோடிக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக மருத்துவ சேவைக் கழகம் தொடர்ந்து மருந்துகள், பாதுகாப்பு உபகரணங்கள், அறுவை சிகிச்சைக்கான முக கவசங்கள் போன்றவற்றை கொள்முதல் செய்து வருகிறது. அவற்றை அனைத்து மருத்துவ நிறுவனங்களுக்கும் இந்த கழகம், கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் வினியோகித்து வருகிறது.

ஊசிகள் வாங்க...

தற்போது, தமிழகத்தில் 100 சதவீத தடுப்பூசி அளிக்கும் சாதனை நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக ஊசிகள் (சிரிஞ்ச்) வாங்கப்பட வேண்டும்.

இதுவரை 1.25 கோடி ஊசிகள் வினியோகிக்கப்பட்டு உள்ளன. ஆனால் 7 கோடி ஊசிகள் வழங்கப்பட வேண்டும்.

எனவே அரசுக்கு தமிழக மருத்துவ சேவைக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் கடிதம் எழுதி, அடுத்த 90 நாட்களுக்குள் வாங்கப்பட வேண்டிய தடுப்பூசிகள் மற்றும் சில உபகரணங்கள் பற்றிய விவரங்களை அனுப்பியுள்ளார்.

ரூ.32 கோடி

மூன்றடுக்கு முக கவசங்கள், என்95 முக கவசங்கள், பிபிஇ கிட்கள், சிஎஸ்1சிசி ஊசிகள் ஆகியவை வாங்க ரூ.32 கோடி ஒதுக்கப்பட வேண்டும் என்று அரசிடம் கோரியுள்ளார். இந்த உபகரணங்கள் இம்மாத கடைசிவரையான தேவைக்கானதாகும். அவரது கோரிக்கையை அரசு கவனமுடன் பரிசீலித்து ரூ.32 கோடி தொகைக்கான அனுமதியை அளித்து உத்தரவிடுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story