பொதுப்பணித்துறையில் பதிவு செய்ய விரும்பும் ஒப்பந்தக்காரரின் பண வரம்பு உயர்வு அரசாணை வெளியீடு


பொதுப்பணித்துறையில் பதிவு செய்ய விரும்பும் ஒப்பந்தக்காரரின் பண வரம்பு உயர்வு அரசாணை வெளியீடு
x
தினத்தந்தி 21 Dec 2021 6:18 PM GMT (Updated: 21 Dec 2021 6:18 PM GMT)

பொதுப்பணித்துறையில் பதிவு செய்ய விரும்பும் ஒப்பந்தக்காரரின் பண வரம்பு உயர்வு அரசாணை வெளியீடு.

சென்னை,

தமிழக பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழக சட்டசபையில் கடந்த ஆகஸ்டு 27-ந் தேதியன்று பொதுப்பணித் துறை அமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ஒப்பந்தக்காரர் பதிவு ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பித்தல் என்பதில் இருந்து 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று மாற்றப்படும். புதிய ஒப்பந்தக்காரர் பதிவு மற்றும் புதுப்பித்தல், மண்டல தலைமை பொறியாளர் அளவிலேயே இனி மேற்கொள்ளப்படும் என்று கூறியிருந்தார். அதோடு, ஒப்பந்தக்காரரின் பண வரம்பின் அடிப்படையிலான தர அளவீட்டை திருத்தி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, முதல் 5 பிரிவின் கீழ் வரும் ஒப்பந்ததாரரின் பண வரம்பு திருத்தி அமைக்கப்படுகிறது.

பதிவு செய்யும் முதல் பிரிவின் கீழ் வரும் ஒப்பந்தக்காரரின் பண வரம்பு ரூ.75 லட்சத்தில் இருந்து ரூ.10 கோடியாகவும்; 2-ம் பிரிவு ஒப்பந்ததாரின் பண வரம்பு ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரை (முன்பு ரூ.75 லட்சம்) ;

3-ம் பிரிவினருக்கு ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை (முன்பு ரூ.30 லட்சம்) ; 4-ம் பிரிவினருக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை (முன்பு ரூ.15 லட்சம்) ; 5-ம் பிரிவினருக்கு ரூ.50 லட்சம் (முன்பு ரூ.6 லட்சம்) என மாற்றி அமைத்து உத்தரவிடப்படுகிறது.

Next Story