சென்னை உள்பட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு


சென்னை உள்பட  11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 31 Dec 2021 6:26 PM IST (Updated: 31 Dec 2021 6:26 PM IST)
t-max-icont-min-icon

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

அதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த 3 மணி நேரத்திற்கு பரவலாக கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 


Next Story