தமிழ்நாட்டில் ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - புதிய கட்டுப்பாடுகள் என்ன?


தமிழ்நாட்டில் ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - புதிய கட்டுப்பாடுகள் என்ன?
x
தினத்தந்தி 10 Jan 2022 3:12 PM GMT (Updated: 10 Jan 2022 3:30 PM GMT)

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சென்னை,

நாடு முழுவதும் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய நிலையில், தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்துவிட்டது. ஒரு பக்கம் கொரோனா தடுப்பூசி போடும் பணி வேகமாக நடந்தாலும், மற்றொரு பக்கம் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 

தொற்று பாதிப்பு அதிகரிப்பால் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, ஏனைய  நாட்களில் இரவு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுக்ள் விதிக்கப்பட்டன. 

 தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில்,  கூடுதலாக சில கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு ஊரடங்கை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: 

* பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்வோர் பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75 சதவீதம் பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதி

*ஜனவரி 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு

* ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது பொது,போக்குவரத்து, மெட்ரொ ரெயில் இயங்காது. மின்சார ரெயில்கள் ஞாயிற்று கிழமை அட்டவணைப்படி இயங்கும்.

* உணவகங்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி

*உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதி

* இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை.

*16-ம் தேதி, வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை வாடகை வாகனங்களுக்கு அனுமதி

*பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்வோர் நலன் கருதி பொது பேருந்துகளில் 75% பயணிகள் அனுமதி.

* முழு ஊரடங்கு நாளில் தடை செய்த/ அனுமதித்த இதர செயல்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும். 

* பொது முடக்க காலத்தில் ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜனவரி 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

Next Story