மாநில செய்திகள்

மசாஜ் சென்டருக்கு சீல் + "||" + Seal for massage center

மசாஜ் சென்டருக்கு சீல்

மசாஜ் சென்டருக்கு சீல்
விபசாரம் நடந்த மசாஜ் சென்டருக்கு நகாராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்
புதுவை அண்ணா சாலையில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பதாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தி, விபசாரத்தில்  ஈடுபட்டவர்களை கைது செய்தனர். மேலும் மசாஜ் சென்டருக்கு அனுமதி பெற்று விபசாரம் நடத்திய கட்டிடத்துக்கு சீல் வைக்க நகராட்சிக்கு பரிந்துரை செய்தனர். அதன்பேரில் நேற்று வருவாய் அதிகாரி சாம்பசிவம் தலைமையிலான அதிகாரிகள் அண்ணா சாலையில் உள்ள அந்த மசாஜ் சென்டரை பூட்டி சீல் வைத்தனர். இதேபோல் புதுவை சாரம் மகாத்மா காந்தி நகராட்சி கடைகளில் 2 ஆண்டுகளாக மாத வாடகை செலுத்தாத 2 கடைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.