கடலூர் மாவட்ட கலெக்டருக்கு கொரோனா தொற்று...!


கடலூர் மாவட்ட கலெக்டருக்கு கொரோனா தொற்று...!
x
தினத்தந்தி 24 Jan 2022 10:40 AM GMT (Updated: 2022-01-24T16:10:37+05:30)

கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் கொரோனா 3-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் நாளொன்றுக்கு 300-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல் முக கவசம் அணிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story