கொரோனா பரவல்: தமிழகத்தில் குடியரசு தினத்தன்று நடைபெறவிருந்த கிராம சபை கூட்டம் ரத்து...!


கொரோனா பரவல்: தமிழகத்தில் குடியரசு தினத்தன்று நடைபெறவிருந்த கிராம சபை கூட்டம் ரத்து...!
x
தினத்தந்தி 24 Jan 2022 12:28 PM GMT (Updated: 2022-01-24T17:58:16+05:30)

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் குடியரசு தினத்தன்று நடைபெறவிருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

நாட்டின் 73ஆவது குடியரசு தினம் நாளை மறு நாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. தொற்று பரவல் தினம் தினம் காட்டுத்தீ போல அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் குடியரசு தினத்தன்று நடைபெறவிருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் கிராம சபை கூட்டம் நடத்தக்கூடாது என பஞ்சாயத்துக்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்த வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Next Story