மாநில செய்திகள்

தேவகோட்டை அருகே கள்ளக்காதலனுடன் சென்ற மனைவியை மண்வெட்டியால் அடித்து கொன்ற கணவர் + "||" + The husband who beat his wife with a spade when he went with his false lover near Devakottai

தேவகோட்டை அருகே கள்ளக்காதலனுடன் சென்ற மனைவியை மண்வெட்டியால் அடித்து கொன்ற கணவர்

தேவகோட்டை அருகே கள்ளக்காதலனுடன் சென்ற மனைவியை மண்வெட்டியால் அடித்து கொன்ற கணவர்
கள்ளக்காதலனுடன் சென்ற மனைவியை மண்வெட்டியால் அடித்து கணவர் கொலை செய்தார்.
காரைக்குடி,

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள முடிகரை கிராமத்தை சேர்ந்தவர் வீராச்சாமி(வயது 42). இவரது மனைவி அன்னலெட்சுமி(32). இவர்களுக்கு தயாநிதி(12), வித்திஷ்(7) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

இந்தநிலையில் அன்னலெட்சுமிக்கும், முடிக்கரை கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்(35) என்பருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதை கணவர் வீராச்சாமி கண்டித்தார். இதையடுத்து அன்னலெட்சுமி தனது கள்ளக்காதலனுடன் தலைமறைவாகி விட்டார்.

இதனால் வீராச்சாமி தனது 2 மகன்கள் மற்றும் மாமனார், மாமியாருடன் வசித்து வந்தார். இந்நிலையில் அன்னலெட்சுமி, கள்ளக்காதலனுடன் நேற்று தனது பெற்றோர் வீட்டுக்கு வந்தார். பின்னர் பெற்றோரிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த வீராச்சாமிக்கும், அன்னலெட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த வீராச்சாமி, மண்வெட்டியால் அன்னலெட்சுமியை சரமாரியாக தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே அன்னலெட்சுமி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து திருவேகம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வீராச்சாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.