நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - கட்சிகளின் வாக்கு விகிதங்கள் வெளியீடு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிக சதவீதமான வாக்குகளைப் பெற்று முதல் இடத்தில் உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகளின் விகிதங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி திமுக மாநகராட்சிகளில் 43.59%, நகராட்சிகளில் 43.49%, மற்றும் பேரூராட்சிகளில் 41.91% வாக்குகள் வாக்குகளை பெற்று முதல் இடத்தில் உள்ளது.
அதே சமயம் அதிமுக மாநகராட்சிகளில் 24%, நகராட்சிகளில் 26.86%, பேரூராட்சிகளில் 25.56% வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. அடுத்ததாக பாஜக மாநகராட்சிகளில் 7.17%, நகராட்சிகளில் 3.31%, பேரூராட்சிகளில் 4.30% வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. காங்கிரஸ் கட்சி மாநகராட்சிகளில் 3.16%, நகராட்சிகளில் 3.04%, பேரூராட்சிகளில் 3.85% வாக்குகளை பெற்று நான்காவது இடத்தில் உள்ளது.
Related Tags :
Next Story