திருத்தணியில் பங்குனி உத்திர திருவிழா - வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை


திருத்தணியில் பங்குனி உத்திர திருவிழா - வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை
x
தினத்தந்தி 18 March 2022 4:06 PM GMT (Updated: 18 March 2022 4:06 PM GMT)

திருத்தணியில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, பக்தர்கள் மணிக்கணக்காக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர்,

திருத்தணி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு மூலவருக்கு காலையில் தங்க வேல், தங்க கிரீடம், வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. 

தொடர்ந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் மயில்காவடி எடுத்தும், பெண்கள் பால் குடம் எடுத்தும் முருகப்பெருமானை வழிபட்டனர். மேலும் தரிசனத்திற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், மூலவரை தரிசிக்க மணிக்கணக்காக வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

Next Story