தமிழகம் வரும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவுக்கரம்: முதல்-அமைச்சர் அறிவிப்புக்கு கி.வீரமணி வரவேற்பு


தமிழகம் வரும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவுக்கரம்: முதல்-அமைச்சர் அறிவிப்புக்கு கி.வீரமணி வரவேற்பு
x
தினத்தந்தி 25 March 2022 12:14 AM IST (Updated: 25 March 2022 12:14 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் வரும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவுக்கரம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு கி.வீரமணி வரவேற்பு.

சென்னை,

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இலங்கையில் அதிபர் ராஜபக்சே தலைமையிலான ஆட்சி பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்த மக்கள், விலைவாசி உயர்வு, நிதித் தட்டுப்பாட்டால் தத்தளித்து வருகிறார்கள்.

இலங்கை குடிமக்களில் தமிழர்கள் கடும் பஞ்சத்தால், வறுமையால் அவதிப்படுகிற நிலையில், ‘‘பஞ்சம்’’ காரணமாக வேறு வழியின்றி மீண்டும் ‘ஏதிலிகளாக’ எம் தொப்புட்கொடி உறவுகள் தமிழ்நாடு நோக்கி வருவோருக்கு ஆதரவுக் கரத்தை, மனிதாபிமானத்தின் அடிப்படையில் தமிழ்நாடு தி.மு.க. அரசு, வழங்கி சட்டப்படி உதவிகள் செய்வோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் கூறியிருப்பது, கருணை மழை பொழிந்ததாகவே கருதி வரவேற்கப்பட வேண்டும்.

நிலைமை சரியாகும் வரை அவர்களுக்குத் தமிழ்நாடு ஆதரவு காட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story