நடிகர் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்


நடிகர் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 13 April 2022 4:33 PM GMT (Updated: 2022-04-13T22:03:10+05:30)

நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியானது. இந்த படத்தை காண அதிகாலை முதலே தியேட்டர்களில் ரசிகர்கள் கூடினார்கள்.

நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியானது. இந்த படத்தை காண அதிகாலை முதலே தியேட்டர்களில் ரசிகர்கள் கூடினார்கள்.
புதுவையை பொறுத்தவரை ஒவ்வொரு தியேட்டரிலும் முதல் காட்சிக்கான 65 சதவீத டிக்கெட்டுகளும், 2-வது காட்சிக்கான 50 சதவீத டிக்கெட்டுகளும் அரசின் உத்தரவுப்படி விஜய் ரசிகர் மன்றத்தினருக்கு ஒதுக்கப்பட்டது.
இந்த படத்தை வரவேற்று புதுவை நகரம் முழுவதும் விஜய் ரசிகர்கள் கட்-அவுட், பேனர்கள் வைத்திருந்தனர். காலையில் கட்-அவுட்டுக்கு பாலாபிசேகம் செய்தனர்.
தியேட்டர்களில் படம் திரையிடப்பட்டதும் ரசிகர்கள் கோஷம் எழுப்பியபடி இருந்தனர். பட்டாசு, வெடித்தும் கொண்டாடினார்கள்.
திருக்கனூர் பகுதியில் உள்ள 2 திரையரங்குகளில் நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை காண  இன்று அதிகாலை முதலே விஜய் ரசிகர்கள் திருக்கனூர் பகுதியில் குவிய தொடங்கினார்கள். நடிகர் விஜயின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் ரசிகர்கள் பேண்டு, வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக சென்று தியேட்டர்களின் முன்பு கோஷம் எழுப்பி ஆர்ப்பரித்தனர். ரசிகர்களை கட்டுப்படுத்த திருக்கனூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story