குடிபோதையில் அப்பா மகன் சண்டை: சமாதானம் செய்ய சென்ற சித்தப்பா பலி


குடிபோதையில் அப்பா மகன் சண்டை: சமாதானம் செய்ய சென்ற சித்தப்பா பலி
x
தினத்தந்தி 18 April 2022 6:23 PM IST (Updated: 18 April 2022 6:23 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அருகே குடிபோதையில் சண்டை போட்ட அப்பா மகனை சமாதானம் செய்ய சென்ற சித்தப்பாவை உதைத்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள மேலப்பாலையூர் மில் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 52 ). இவர் நேற்று தன் வீட்டு வாசலில் அமர்ந்திருந்தபோது இவரது அண்ணன் ஜெயபாலுக்கும், அவரது மகன் பிரபாகரனுக்கும் குடிபோதையில் பயங்கரமான சண்டை நடந்து கொண்டிருந்தது. 

அப்போது அவர்களை ஏன் சண்டை போடுகிறீர்கள் என்று சமாதானம் செய்தபோது, பிரபாகரன் (வயது 29) தனது சித்தப்பா குமாரை ஓங்கி உதைத்துள்ளார். அதில் குமார் மயக்கம் ஏற்பட்டு சரிந்து விழுந்தார். 

இது கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு குடவாசல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமார் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து குமாரின் மனைவி பேபி கொடுத்த புகாரின் பேரில் குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரின் உடலை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உடனடியாக பிரபாகரனை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.


Next Story